Wednesday, April 15, 2009

சிந்தனைக்கு

ஒரு சிறு பெண்குழந்தை ரயில்வே பிளாட்பாரத்தில் பழங்களைக் கூடையில் சுமந்து கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறாள் .மூன்று நண்பர்கள் வண்டியில் ஏற அவசரமாக ஓடியும், நடந்தும் வந்து வண்டியில் ஏறுகிறார்கள் . அதில் ஒரு நண்பர் இந்த பழம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் கூடையை தட்டிவிட்டு வண்டியில் ஏறிவிடுகிறார். பழங்கள் தரையில் விழுந்து சிதறி விடுகின்றன. இந்தபெண்குழந்தை கீழே குனிந்து அந்த பழங்களை தடவி தடவி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதை அந்த நண்பர் பார்த்து வண்டியிலிருந்து கீழ இறங்கி அந்த பெண்ணுடன் சேர்ந்து மற்ற பழ்ஙகளையும் பொறுக்குகிறார் .இதில் அநேக பழங்கள் கண்ணியும், பிளாட்பாரம் அடியிலும் விழுந்துகிடக்கின்றன .அச்சமயம் இந்த நண்பர் அந்த பெண் கண் பார்வை அற்ற பெண்குழந்தை என்று அறிகிறார் . உடனே வேகமாக வோடி, அந்த பிளாடபாரத்தில் உள்ள பழக கடையில், ஒருகூடை நிறைய பழங்களை வாங்கிக்கொண்டுவந்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்து, இவைகளை நீ விற்று பணத்தை பெற்றுக்கொள் என்றுசொல்லி மறுபடியும் வண்டியில் ஏற செல்கிறார்.

அப்பொழுது அந்தக்குழந்தை அந்த நண்பரிடம் கேட்கிறது
" நீங்கதான் இயேசு நாதரா"

கிறிஸ்தவர்களாகிய நாம் என்ன செய்வோம்! சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment